அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் தவறி விழுந்த குழந்தை... பரபரப்பு காட்சிகள்


அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் தவறி விழுந்த குழந்தை... பரபரப்பு காட்சிகள்
x
தினத்தந்தி 28 April 2024 4:25 PM IST (Updated: 28 April 2024 4:47 PM IST)
t-max-icont-min-icon

குழந்தையை காப்பாற்றுவதற்காக மேற்கூரையின் கீழே குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பெரிய போர்வை ஒன்றை பிடித்துக்கொண்டு இருந்தனர்.

சென்னை,

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. குழந்தையை மீட்பதற்காக குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி போராடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேற்கூரையின் விளிம்பில் சிக்கிய குழந்தை எந்நேரமும் கீழே விழுவது போல் இருந்தது. குழந்தையை காப்பாற்றுவதற்காக மேற்கூரையின் கீழே குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பெரிய போர்வை ஒன்றை பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த நபர் ஒருவர், ஜன்னல் வழியாக ஏறி தனது உயிரை பணயம் வைத்து கீழே விழவிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டார். அவருக்கு மற்றொரு நபர் உதவி செய்தார். மக்கள் ஒன்றுகூடி குழந்தையை மீட்க போராடிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story