செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த துப்புரவு பெண் தொழிலாளி


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த துப்புரவு பெண் தொழிலாளி
x

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த துப்புரவு பெண் தொழிலாளியை சக பணியாளர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் உதயம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி (வயது 45). செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் துப்பரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து லிப்டில் வந்தபோது 2-வது தளத்தில் லிப்ட்டின் கதவு திறக்க முடியாமல் போனது.

இதனால் லிப்ட்டில் சிக்கி தவித்த ஜானகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருமணி நேரம் பரிதவித்தார். இந்த காட்சி நோயாளிகள் மற்றும் சக பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரியில் பணியாற்றும் சக பணியாளர்கள் இரும்பு குழாய்களால் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து ஜானகியை மீட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பரப்பரப்புடன் காணப்பட்டது.

1 More update

Next Story