அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது


அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
x

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.


Next Story