ஆவடி அருகே துரித உணவு கடையில் தீ விபத்து


ஆவடி அருகே துரித உணவு கடையில் தீ விபத்து
x

ஆவடி அருகே துரித உணவு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை

ஆவடியை அடுத்த வெ ள்ளானூர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30). இவர், வெள்ளானூர் சந்திப்பில் துரித உணவு கடை மற்றும் அத்துடன் இணைந்தபடி பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 3 மாதங்களாக இந்த துரித உணவு கடை பூட்டியே கிடந்தது. நேற்று மாலை திடீரென கடையின் கூரையில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கடையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் துரித உணவு கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story