காஞ்சிபுரத்தில் கடப்பாரையால் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருட்டு கும்பல்


காஞ்சிபுரத்தில் கடப்பாரையால் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருட்டு கும்பல்
x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்,

வாலாஜாபாத் அருகே காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் தனியார் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இரவில் வந்த மர்மகும்பல் கடப்பாரையால் உடைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வாகனத்தின் சைய்ரன் ஒலி கேட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இதில், பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படாத நிலையில், கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

1 More update

Next Story