விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டமா? புஸ்ஸி ஆனந்த் பேட்டி


விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டமா?  புஸ்ஸி ஆனந்த் பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2023 9:54 AM GMT (Updated: 5 Aug 2023 12:15 PM GMT)

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "இலவச சட்ட ஆலோசனை மையம்"அமைக்க இருக்கிறோம் என விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்டரீதியாக அணுகவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்த பிறகு, விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "இலவச சட்ட ஆலோசனை மையம்"அமைக்க இருக்கிறோம். விஜய்-யின் அறிவுரைப்படி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வழக்கறிஞர் அணி செயல்பட வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தப்பட்டது என்றார்.

மேலும் செய்தியாளர் ஒருவர், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதா...? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக புன்னகைத்துவிட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த்.


Next Story