உடலில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி, மகளை உயிருடன் எரித்த தொழிலாளி


உடலில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி, மகளை உயிருடன் எரித்த தொழிலாளி
x

சென்னை ராயபுரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி, மகளை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை ராயபுரம் ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர், அங்குள்ள அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (34). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான கார்த்திக், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவும் கார்த்திக் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை ரேவதி தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மனைவி மற்றும் மகளை கைகளால் அடித்து தாக்கினார். இதில் இருவருக்கும் கழுத்தில் வீக்கம் மற்றும் மூக்கில் ரத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் ஆத்திரம் அடங்காத கார்த்திக் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து மனைவி மற்றும் மகள் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் கார்த்திகை தடுத்து ரேவதி மற்றும் மகளை மீட்டு ஆட்டோவில் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் மகளை உயிருடன் எரித்து கொல்ல முயன்றதாக கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story