எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x

கோப்புப்படம் 

செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.

ஆனால், மசோதா தவிர்த்து பிற பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப சபாநாயகர் அனுமதிப்பாரா என்ற கேள்வி உள்ளது. இதற்கிடையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப அனுமதிக்கக்கோரி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story