சேவல் திருடப்பட்ட சம்பவத்தில் சமரசம் செய்து வைத்த நபருக்கு கத்திக்குத்து - ராணிப்பேட்டை அருகே பயங்கரம்

கோப்புப்படம்
சமரசம் செய்து வைத்த நபரின் மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை அருகே, சேவல் திருடப்பட்ட சம்பவத்தில் சமரசம் செய்து வைத்த நபரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு சொந்தமான சண்டை சேவலை, முருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடியுள்ளார்.
இந்த நிலையில் வினோத்தின் நண்பர், திருடப்பட்ட சேவலை சமரசம் செய்து வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், மறைத்து வைத்திருந்த கத்தியால், சமரசம் செய்து வைத்த நண்பரின் மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






