4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது


4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
x

சென்னை ஐஸ்அவுசில் நீச்சல் பயிற்சியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சென்னை

சென்னை ஐஸ்அவுசில் நீச்சல் பயிற்சியாளர் கொலை வழக்கு:

4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைதுசென்னை,

சென்னை திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). நீச்சல் பயிற்சியாளராக இருந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (37). மெரினா கடற்கரையில் சுண்டல், பஜ்ஜி மற்றும் வறுத்த மீன் விற்பனை கடை நடத்தி வந்தார்.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி அன்று ஆட்டோவில் வந்த கும்பல் இவருடைய வீட்டுக்குள் புகுந்து, சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயலட்சுமி சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் சரவணன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் 8 பேர் சிக்கினார்கள். திருவல்லிக்கேணி பழனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேசப்பன் (32) என்பவர் மட்டும் போலீசார் வசம் சிக்காமல் இருந்து வந்தார். இந்த கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் நேற்று முன்தினம் போலீசார் பிடியில் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story