சாலை வளைவில் கல்லூரி மாணவி மீது வேகமாக மோதிய பேருந்து..! பதைபதைக்கும் காட்சி..!


சாலை வளைவில் கல்லூரி மாணவி மீது வேகமாக மோதிய பேருந்து..! பதைபதைக்கும் காட்சி..!
x
தினத்தந்தி 11 Dec 2023 11:01 AM GMT (Updated: 11 Dec 2023 11:03 AM GMT)

மாணவி மீது பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிய சேர்ந்த கல்லூரி மாணவி, அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக மாணவி சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, வளைவில் திரும்பும் போது மாணவியின் மீது வேகமாக மோதியது. இதில் அந்த மாணவி சாலையோரத்தில் உள்ள புதரில் தூக்கிவீசப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மாணவி மீது பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story