சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சற்று அதிகரிப்பு


சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2023 5:38 AM GMT (Updated: 20 Nov 2023 5:41 AM GMT)

ஒரு கிராம் வெள்ளி ரூ.79 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.79 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story