செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - மாட்டை காப்பாற்ற சென்றபோது பரிதாபம்


செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - மாட்டை காப்பாற்ற சென்றபோது பரிதாபம்
x

செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கிய மாட்டை காப்பாற்ற சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார். மாடும் பரிதாபமாக இறந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த தேவனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் ரெட்டிபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை தேவனூரில் உள்ள ரெங்கநாதன் அவென்யூ பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை அவரது பசு மாடு மிதித்ததில் மின்சாரம் தாக்கி துடித்தது.

இதை பார்த்து பதற்றமடைந்த மணிகண்டன் தனது பசு மாட்டை காபாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பசு மாடும் உயிரிழந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலூர் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story