விமானத்தை தள்ளிச் செல்லும் போது விபத்து.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை ஓடுபாதைக்கு தள்ளிச் செல்லும் போது, வாகனத்தில் கம்பி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது ஓடுபாதைக்கு விமானத்தை கொண்டு செல்லும் தள்ளு வாகனத்தில் கம்பி உடைந்து, பாதி பகுதி விமானத்தில் சிக்கிக் கொண்டது.
இந்தக் கம்பியை உடனடியாக எடுக்க முடியாத சூழல் நிலவியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகளை மாற்று விமானத்தில் அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமான போக்குவரத்து ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story