தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இன்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம், அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைக்கு முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story