மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மேயர் பிரியா தகவல்


மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மேயர் பிரியா தகவல்
x

விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள 15 முதல் 22 வது வார்டு வரை நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டதின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காணப்படும்.

இன்னும் ஒரு வருட காலத்திற்குள் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story