மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கினை நோக்கி சுட்ட நடிகர் அஜித்


மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கினை நோக்கி சுட்ட நடிகர் அஜித்
x

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார்.

திருச்சி:

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய போட்டிகள் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 1,200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.

இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் 16 வயது சப்-யூத், 19 வயதினருக்கான யூத், 21 வயதினருக்கு ஜூனியர், 21ல் இருந்து 45 வயதினருக்கான சீனியர், 45 வயதில் இருந்து 60 வயதிற்கான சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் , தமிழ்ச்செல்வன், நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் நடிகர் அஜித் திருச்சி வந்தார்.

இதனைதொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இன்று காலை ரைபிள் கிளப்புக்கு வந்த அவர் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார்.

அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே யாரும் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. நடிகர் அஜித் திருச்சி வந்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story