விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா


விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா
x

சென்னை எண்ணூரில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டுக்கு சென்று நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார்.

சென்னை

எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 24). இவர், திருவொற்றியூர் மேற்கு பகுதி சூர்யா நற்பணி மன்ற பொருளாளராக இருந்து வந்தார். சூர்யாவின் தீவிர ரசிகரான இவர், ரத்த தானம், தெருவோரவாசிகளுக்கு உணவளித்தல் போன்ற நற்பணிகளை மேற்கொண்டு வந்தார். இதையறிந்த சூர்யா, கடந்த மாதம் அவரை நேரில் அழைத்து பாராட்டி, புகைப்படம் எடுத்துகொண்டார்.

இந்தநிலையில் அம்பத்தூர் டி.வி.எஸ். தொழிற்சாலையில் பணியாற்றிய அரவிந்தன், கடந்த மாதம் 24-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது மாதவரம் ரவுண்டானா அருகே வடமாநில லாரி மோதி பலியானார்.

தனது ரசிகர் விபத்தில் பலியான தகவல் அறிந்த நடிகர் சூர்யா நேற்று காலை எண்ணூர் நேதாஜி நகரில் உள்ள அரவிந்தன் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதி உதவியும் வழங்கினார். மேலும் என்ன தேவையாக இருந்தாலும், தன்னை தொடர்பு கொள்ளும்படியும் கூறிவிட்டு சென்றார்.

1 More update

Next Story