மணலி புதுநகர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை


மணலி புதுநகர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
x

மணலி புதுநகர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விச்சூரை சேர்ந்தவர் சுமன். அ.தி.மு.க பிரமுகர். இவரது மனைவி வைதேகி. இவர் விச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

அ.தி.மு.க. பிரமுகர்

இவரது அ.தி.மு.க. பிரமுகர் சுமன் நேற்று இரவு விச்சூர் மேட்டுத்தெருவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சுமனை சுற்றி வளைத்தனர். என்ன செய்வது என திகைத்த சுமனை கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

வெட்டிக்கொலை

இதில் ரத்த வெள்ளதில் சுமன் துடிதுடித்து கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து அந்த மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பின்னர் அந்த பகுதிளை சேர்ந்தவர்கள் ஓடி வந்த சுமனை மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுமன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் போரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற மணலிபுதுநகர் போலீசாார் சுமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மணலிபுதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ேநற்று முன்தினம் பெருமாள் கோவில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றதாகவும் அதில் சுமனின் அண்ணன் சுரேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரண் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அ.தி.மு.க. பிரமுகர் சுமன் தட்டிகேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமைந்து சரணின் கூட்டளிகளுடன் தீர்த்து கட்டினாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விச்சூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story