அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சோதனை நடைபெற்றுவரும் இடங்களில் அதிமுகவினர் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story