அதிமுக ஆர்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம் - பரபரப்பு
மின் உயர்வை கண்டித்து அதிமுக ஆர்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.
சென்னை,
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிடவற்றை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது, திமுக அரசுக்கு எதிராகவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி சுமார் அரை மணி நேரம் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதன் பின்னர் ஆர்பாட்ட மேடையில் நின்றுகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், மேடையில் இருந்த இருக்கையிலேயே அவர் அமர வைக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து மேடையில் உள்ள இருக்கையில் அமரவைத்தனர்.
கடுமையான வெயில் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு லேசான தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அவர் சகஜ நிலைக்கு திருப்பினார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.