நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது - செல்லூர் ராஜூ பேட்டி


நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது - செல்லூர் ராஜூ பேட்டி
x

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க.,வுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

சென்னை,

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

போருக்கு தயாராக உள்ளது போல அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வதுபோல தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி தயார் செய்துள்ளார். தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அ.தி.மு.க. தயாராக உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். கூட்டணிக்கு முழு அதிகாரமும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் முடிவை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே, அ.தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை. அவர் மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை. அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story