தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி - எடப்பாடி பழனிசாமி


தினத்தந்தி 24 March 2024 7:59 PM IST (Updated: 24 March 2024 9:07 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.கவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. தி.மு.கவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை. மதுரை எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டியதுதானே. 38 எம்.பிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. - காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story