அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம்? எடப்பாடி பழனிசாமியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு


அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம்? எடப்பாடி பழனிசாமியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
x

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதில், அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story