பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு


பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு
x
தினத்தந்தி 8 March 2024 8:44 AM GMT (Updated: 8 March 2024 8:53 AM GMT)

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை ரூ.918.50க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைத்துள்ளன.

இதன்மூலம் சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பணையானது இன்று நள்ளிரவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னையை போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்பட்டு வருவதால், இப்போது அவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைந்து ரூ.503க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேவேலை வணிக பயன்பட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story