மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன், அன்பழகன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பிரகாஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் அம்பிகா மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் மீனா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சிவசங்கரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கொடுக்கப்படாத ஊதியத்தை கால தாமதமாக கொடுக்கும் ஊதியத்திற்கும் வட்டி சேர்த்து வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைவருக்கும் 100 நாட்கள் முடியும் வரை தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். ஆதார் லிங்க் என பல்வேறு குறை கூறி வேலைக்கு வரும் ஆட்களை குறைப்பதை நிறுத்த வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் ஊதியம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினா்.