இன்று மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்


இன்று மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
x

தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்த பிறகு அதிமுக தனது கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு , அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் கிளை அமைப்புகளைப் பலப்படுத்துவது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்த பிறகு அதிமுக தனது கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Next Story