வி.சி.க. சார்பில் செப்டம்பர் 17-ந்தேதி மது ஒழிப்பு மாநாடு - திருமாவளவன் அறிவிப்பு


வி.சி.க. சார்பில் செப்டம்பர் 17-ந்தேதி மது ஒழிப்பு மாநாடு - திருமாவளவன் அறிவிப்பு
x

வி.சி.க. சார்பில் செப்டம்பர் 17-ந்தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு மதுபானங்கள் தீர்வு அல்ல. மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால்தான் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும். முழு மதுவிலக்கு கொள்கையில் வி.சி.க. உறுதியாக உள்ளது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.


1 More update

Next Story