அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 4-ந் தேதி விசாரணை - ஐகோர்ட்டு அறிவிப்பு


அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 4-ந் தேதி விசாரணை - ஐகோர்ட்டு அறிவிப்பு
x

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "அ.தி.மு.க.,பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு வந்து விட்டது.

எனவே, அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளை விசாரணைக்கு பட்டியலிடலாமா?" என்று இருதரப்பு வக்கீல்களிடமும் கேட்டார்.

அதற்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடலாம் என்று வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்டு, பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகளை எல்லாம் வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

அதேபோல, ஜூன் 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஐகோர்ட்டு உத்தரவை மீறி புதிய தீர்மானம் இயற்றப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Next Story