பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - திருடுவதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலம்


பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - திருடுவதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலம்
x

பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் திருடுவதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சேலம்,

சேலத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் திருடுவதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த சித்தன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபு. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிறந்தநாள் கொண்டாடிய இவர், பட்டா கத்தியை கொண்டு கேக் வெட்டிய வீடியோ காட்சிகள் காவல்துறையினரின் கண்ணில் சிக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, பிறந்த நாள் கொண்டாடிய பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, சூர்யா, பிரகாஷ், உட்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருடுவதற்கு திட்டமிட்டிருந்ததும், அதற்காக பட்டாகத்தி, மிளகாய் தூள் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story