அமெரிக்க பயணியிடம் இருந்த துப்பாக்கி தோட்டா - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்


அமெரிக்க பயணியிடம் இருந்த துப்பாக்கி தோட்டா - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு தயாராக இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரூ ஜெர்ட் ஏர்சின் என்பவரிடம் துப்பாக்கி தோட்டா இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபரிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தோட்டாக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



1 More update

Next Story