மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை


மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2023 1:12 PM GMT (Updated: 10 Nov 2023 1:28 PM GMT)

ராகிங்கில் ஈடுபட்டால் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

சென்னை,

கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவத்தில் அதே கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பல வருடங்களாக ராகிங் என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே அவர்களுக்கு அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.

தற்போது கோவை தனியார் கல்லூரியில் ராகிங் நடந்திருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும். எனவே மாணவர்கள் இதைப் புரிந்து கொண்டு ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.




Next Story