அண்ணாமலையின் கடை போணியாகவில்லை - ஜெயக்குமார் விமர்சனம்
பா.ஜ.க.வை போல நாங்கள் யாரையும் வலை வீசி பிடிப்பது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
அ.தி.மு.க.வை நோக்கி மாற்றுக் கட்சியை சார்ந்த பலர் ஐக்கியமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் பா.ஜ.க. மாதிரி வலை விரித்து பிடிக்கவில்லை, நேற்று கூட அண்ணாமலை கடை விரித்தார். அந்த கடையில் வாங்குவதற்கு ஆள் யாரும் வரவில்லை, அந்த கடைக்கும் யாரும் வரவில்லை. அது போணியாக ஆகாத கடை, அண்ணாமலை கடை போணி ஆகாத கடை என்றார்.
Related Tags :
Next Story