தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை; 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் - 336 பேர் கைது
கடந்த 28-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும் தமிழக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 28-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.18 கோடி மதிப்பிலான 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story