பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x

பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னைக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், மதுரைக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இளம்பகவத், செங்கல்பட்டுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கடபிரியா என 38 மாவட்டங்களுக்கு பிரத்தியேக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story