மது குடிக்க வேண்டாம் என காந்தி வேடமணிந்து குடும்பத்துடன் விழிப்புணர்வு


மது குடிக்க வேண்டாம் என காந்தி வேடமணிந்து குடும்பத்துடன் விழிப்புணர்வு
x

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் தனது மனைவி மற்றும் மகளுடன் பயணம் செய்து காந்தியின் கொள்கையை மக்களிடம் விளக்கி வருகிறார்.

சென்னை

திரு.வி.க. நகர்:

சென்னை புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). இவர், மகாத்மா காந்தியை போல் வேடமணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் தனது மனைவி மற்றும் மகளுடன் பயணம் செய்து காந்தியின் கொள்கையை மக்களிடம் விளக்கி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று புளியந்தோப்பு, கொடுங்கையூர் பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு காந்தி வேடமணிந்த நாகராஜன் தனது குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்கு வந்த மதுபிரியவர்களிடம், இரு கைகளையும் கூப்பி வணங்கி, "மது குடிப்பது உடலுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே அதனை தவிருங்கள் " என கேட்டுக்கொண்டார்.

1 More update

Next Story