இன்று மாலை சென்னை வருகிறது பவதாரிணி உடல்


இன்று மாலை சென்னை வருகிறது பவதாரிணி உடல்
x
தினத்தந்தி 26 Jan 2024 1:08 AM GMT (Updated: 26 Jan 2024 2:09 AM GMT)

இளையராஜாவின் மகள் பவதாரிணி் உடல்நலக்குறைவால் இலங்கையில் நேற்று உயிரிழந்தார்.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இதையடுத்து பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் நடைபெற உள்ளன. இலங்கையின் கொழும்பு நகரில் நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக இளையராஜா தற்போது இலங்கையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story