பா.ஜ.க.வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : அண்ணாமலை, தமிழிசை போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு


பா.ஜ.க.வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : அண்ணாமலை, தமிழிசை போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2024 12:44 PM GMT (Updated: 21 March 2024 1:37 PM GMT)

தமிழகத்தில் முதல் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. தலைமை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. அந்த வகையில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமனாலும் வெளியாகும் என்று அண்ணாமலை இன்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது

அதன் விவரம்:

  • கோவை- அண்ணாமலை
  • தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்
  • நெல்லை: நயினார் நாகேந்திரன்
  • கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
  • மத்திய சென்னை: மனோஜ் பி செல்வம்
  • கிருஷ்ணகிரி: நரசிம்மன்
  • நீலகிரி (தனி): எல் முருகன்
  • பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)
  • வேலூர்: ஏசி சண்முகம் ( புதிய நீதிக்கட்சி -தாமரை சின்னத்தில் போட்டி)




Next Story