'பா.ஜ.க. பகை கட்சி கிடையாது' - திருமாவளவன் பேச்சு
ஒரு அரசியல் கட்சியோ அல்லது ஒரு சாதியோ நமக்கு பகை என்று சொல்லவே முடியாது என திருமாவளவன் கூறினார்.
சென்னை,
மாங்காடு அம்மன் மூவீஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள 'ஏ' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் திருமாவளவன் பேசியதாவது;-
"மனித குலத்தின் பகை தனி நபர்கள் கிடையாது. பா.ஜ.க. ஒரு பகை கட்சி கிடையாது. ஒரு அரசியல் கட்சியோ, ஒரு சாதியோ நமக்கு பகை என்றும் நாம் சொல்லவே முடியாது.
மனித குலத்தின் பகை மூன்று விஷயங்கள் தான். ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய இந்த மூன்றும் தான் மனித குலத்தின் பகை. இவை மூன்றும் தான் வெவ்வேறு பெயர்களில் நிகழ்கின்றன."
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Related Tags :
Next Story