ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சிக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்


ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சிக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்
x
தினத்தந்தி 23 Jan 2024 12:56 PM GMT (Updated: 23 Jan 2024 1:00 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தல் யார், ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

தற்போது திமுக பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைபிடித்து வருபவர். கருணாநிதியின் பேச்சை கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது பாலுவின் வரலாற்று புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம். பாஜகவை வீழ்த்தக்கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தல், யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல். கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதி காலத்தில் ஒரு கோவிலை கட்டி பாஜக தலைமை மக்களை திசை திருப்ப பார்க்கிறது.

தேர்தலை சந்திக்கும் பாஜகவுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாக திறந்து, சாதித்துவிட்டதாக காட்டுகின்றனர். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story