கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்; 30-க்கும் மேற்பட்டோர் கைது
கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை லாலி ரோடு பகுதியில் கருப்புக்கொடி ஏந்திய போரட்டம் நடைபெற்றது.
கோவை,
கோவை மாவட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ளார். இந்நிலையில் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கோவை லாலி ரோடு பகுதியில் கருப்புக்கொடி ஏந்திய போரட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே பாதுகாப்பு கருதி கவர்னரின் வாகனம் செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story