பாஜகவுடன் கூட்டணி முறிவு: அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


பாஜகவுடன் கூட்டணி முறிவு: அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக அதிமுக கூறியதை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் அதிக அளவில் கூடியிருந்த தொண்டர்கள், உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.


Next Story