வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கன்குப்பம் மீனவ கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் (வயது 53). மீனவரான இவர் குடும்பத்தாருடன் ஆண்டார்குப்பம் முருகர் கோவிலுக்கு வீட்டை பூட்டி கொண்டு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1¼ பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story