கல்பாக்கம் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு


கல்பாக்கம் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
x

அந்த பேருந்து எதிர் திசையில் வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது.

செங்கல்பட்டு,

கல்பாக்கம் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதை கவனித்த அந்த பேருந்தின் நடத்துனர், உடனடியாக பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார்.

இருப்பினும் அந்த பேருந்து எதிர் திசையில் வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பாக்கம் போலீசார், ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story