நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து
தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி காரணமாக முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பல்வேறு ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அதில், செய்துங்கநல்லூர்- ஸ்ரீவைகுண்டம் ரெயில்நிலைய பகுதிகளில் தண்டவாளம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிகள் நாளை (24-12-2023) முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நெல்லையிலிருந்து காலை 7.25 மணி, 10.10 மணி மற்றும் மாலை 4.30 மணி, 6.30 மணி ஆகிய நேரங்களில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் நாளை (24-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருச்செந்தூரில் இருந்து காலை 7.20 மணி, 8.15 மணி மற்றும் மாலை 4.30 மணி, 6.15 மணி ஆகிய நேரங்களில் நெல்லைக்கு புறப்பட்டு செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் நாளை (24-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(வண்டி எண்.06679) நாளை (24-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரையில் நெல்லை- திருச்செந்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(06680) நாளை (24-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரையில் திருச்செந்தூர்- நெல்லை இடையே ரத்து செய்யப்படுவதால், நெல்லையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.