தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மீது வழக்குப்பதிவு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மீது வழக்குப்பதிவு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

தேசிய கொடி அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு வக்பு போர்டு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

விதிகளை மீறி அரசு இலச்சினை, தேசிய கொடி, சுழல் விளக்கு பயன்படுத்திய விவகாரத்தில் தமிழ்நாடு வக்பு போர்டு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்துல் ரகுமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் அஜ்மல்கான் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதம் செய்ததால், அஜ்மல்கான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தமிழ்நாடு வக்பு வாரிய போர்டு தலைவர் அப்துல்ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தேசிய கொடி அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவராக அப்துல் ரகுமான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story