காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேச வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி


காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேச வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சென்னையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு கேட்ட தரவுகளை எடுப்பதற்கு தமிழக அரசுக்கு மனமில்லையோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த தரவுகளை எடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்ய வேண்டும். மற்ற பின்தங்கிய வகுப்பினருக்கும் தரவுகளை எடுத்து தனித்தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எங்கள் பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. போராட்டம் நடத்துவோம்.

காவிரியில் தண்ணீரை பெறும் விவகாரத்தில் குறை சொல்லிக்கொண்டு இருக்கிற நேரம் இல்லை. முதல்-அமைச்சர் கர்நாடகா போக வேண்டும். கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்க வேண்டும்.

இவ்வளவு காலம் நாம் சகோதரத்தன்மையுடன்தான் வாழ்ந்து வருகிறோம். இன்னும் 5 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்காக அரசியல் செய்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரி விஷயத்தை பொறுத்தமட்டில் அதிகாரம் சார்ந்த பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட ஒரு முதல்-அமைச்சர் இன்னொரு முதல்-மந்திரியை சந்தித்து தண்ணீர் கொடுக்க கூறினால் அவர்கள் மனம் இறங்கி வந்து தண்ணீர் கொடுக்க வாய்ப்புள்ளது.

இருகட்சிகளும் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறீர்கள். காவிரி விவகாரத்தில் சட்டம், அரசியல் உள்பட அனைத்து வகையிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story