பராமரிப்பு பணி காரணமாக மயான பூமிகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


பராமரிப்பு பணி காரணமாக மயான பூமிகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x

பராமரிப்பு பணி காரணமாக மயான பூமிகள் இயங்காது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 163-வது கோட்டம் பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியின் எரிவாயு தகன மேடையை 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்திடவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாலும் நாளை (10-ந்தேதி) முதல் ஜூலை 10-ந்தேதி வரை 2 மாத காலங்களுக்கு மயானபூமி இயங்காது. அந்த நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு 162-க்கு உட்பட்ட கண்ணன் காலனி மயான பூமியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதேபோல மாதவரம் மண்டலம் 27-வது வார்டு சாஸ்திரி நகர் மயான பூமியில் உள்ள திரவ பெட்ரோலிய தகன மேடை மற்றும் புகைபோக்கியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) முதல் 25-ந்தேதி வரை 15 நாட்களுக்கு மயானபூமி இயங்காது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள மணலி மண்டலத்துக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மயான பூமி மற்றும் மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட தெலுங்கு காலனி மயானபூமிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Next Story