வெள்ள நிவாரணம்: மத்திய அரசை சாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும் என வைகோ கூறினார்.
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் வெள்ள நிவாரண நிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது;
வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட தொகையில் 15 சதவீதம் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சகமாக செயல்படுகிறது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும். கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. திமுக அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. கடும் வெள்ளத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story