தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story